துணை மின்நிலையத்தில் இடிதாக்கி தீ விபத்து : ரூ.1கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து சேதம்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே இடிதாக்கி துணை மின்நிலைய மின்மாற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
துணை மின்நிலையத்தில் இடிதாக்கி தீ விபத்து : ரூ.1கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து சேதம்
x
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே இடிதாக்கி துணை மின்நிலைய மின்மாற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சிப்காட் பகுதியில் நேற்றிரவு கன மழை பெய்தது. அப்போது இடிதாக்கி அங்கிருந்த மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அங்கிருந்த மற்ற 2 மின்மாற்றிகளும் செயல்படாததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி உபகரணங்கள் எரிந்து சேதமடைந்ததாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்