நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
x
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காளியம்மன் திருக்கோவில் ஆனி திருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அப்போது  சிவசிவா கோஷம் எழுப்பியபடி,ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, நெல்லையப்பர் கோயில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொலைபேசி எண்கள் பொறித்த டேக்கை, குழந்தைகள் கையில் கட்டி விட்டுள்ள போலீசார், இதன்மூலம், காணாமல் போகும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், 15 ட்ரோன் கேமராக்கள் மூலம் தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகளை கண்காணிப்பதுடன், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுக்க, பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்களையும், போலீசார் பொருத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்