வருமான வரி - தமிழகத்தில் புதிதாக 13 லட்சம் பேர் இலக்கு : வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வரும் நிதியாண்டில் தமிழகத்தில்13 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துபவர்களாக, எண்ணிக்கையை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி - தமிழகத்தில் புதிதாக 13 லட்சம் பேர் இலக்கு : வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்
x
ஆன்-லைன் வழியாக வருமான வரி தாக்கலை எளிமையாக செலுத்துவது குறித்து வருமான வரித்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாத ஊதியம் பெறும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர்  அமோல் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வருமான வரித்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி பேசும்போது, 136 கோடி இந்திய மக்கள் தொகையில், வெறும் 5 புள்ளி 7 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதாக கூறினார். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் கூடுதலாக 1 புள்ளி 20 கோடி பேர் தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில், மட்டும் 13 லட்சம் பேர் புதியாக தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்