7 பேர் விடுதலை - ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
பதிவு : ஜூலை 12, 2019, 04:57 PM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநருக்கு சட்டப்பாதுகாப்பு இருப்பதால் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

715 views

பிற செய்திகள்

எஸ்.சி.,எஸ்.டி ஆணையத்தின் சிறப்பு முகாம் : தமிழக அரசு பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜர்

தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் முன், தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் அவர்களது பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.

6 views

தடுத்து நிறுத்தப்பட்ட 14 வயது சிறுமியின் திருமணம்

திருத்தணியில் 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

32 views

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு

காவிரி டெல்டா பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

9 views

"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

14 views

காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

29 views

காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.