அத்தி வரதரை தரிசித்த குடியரசு தலைவர், கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை

அத்தி வரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
x
இன்று பிற்பகல் 3.05 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவியை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து உள்ளே அழைத்துச்சென்றனர். வசந்த மண்டபத்தில் உள்ள அத்திவரதர் சிலை முன்பாக குடியரசுத் தலைவரை அமரவைத்த அர்ச்சகர்கள், அவரது பெயருக்கு துளசியால் அர்ச்சனை செய்து தீப ஆரத்தி காட்டினர். பின்னர் பிரசாதம் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த ராம்நாத் கோவிந்த், 3.50 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் உதயகுமார், காவல் துறையின்ர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும்  வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்