குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்
பதிவு : ஜூலை 12, 2019, 03:47 PM
திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மதுபோதையில் அங்குள்ள கடைகளுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக ரோந்து பணியில் இருந்த காவலர் ஹரிஹரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஹரிஹரன் போதையில் இருந்த இஸ்மாயிலை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இஸ்மாயில் அரிவாளால் காவலரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் ரத்தம் கொட்டிய நிலையில் வந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

718 views

பிற செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

4 views

என்.ஐ.ஏ-வால் இருவர் கைது - சட்டம், ஒழுங்கை பாதிக்கும் - ஹெச்.ராஜா

பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

25 views

பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு : துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி , திருவெறும்பூரில் இலகு ரக ஆயுதங்களை தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கனரக படைக்கலன் தொழிற்சாலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

10 views

காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா : காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் காமராஜர் நினைவு இல்லத்தில், உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

13 views

காமராஜர் சிலைக்கு சோனியா காந்தி மரியாதை..

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

33 views

உள்ளாட்சி தேர்தல் - அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.