தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்
x
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என நாங்கள் பலமுறை தெரிவித்த பின்னரும், காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது, அவர் எதையும் ஏற்றுக் கொள்ளவிலை என்பதை காட்டுகிறது என்று விமர்சனம் செய்தார்.  ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்பதையும் அழகிரி சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்