பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
x
கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்த கோவிலில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  முதல் யாக கால பூஜையை எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கி வைத்தார். மகா கணபதி ஹோமத்துடன் இந்த கும்பாபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் மாலை, திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்