கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை : "கிலோ ஒன்று ரூ.99-ஆக நிர்ணயம்" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு 99 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு அறிவித்தார்.
கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை : கிலோ ஒன்று ரூ.99-ஆக நிர்ணயம் - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
x
கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு 99 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு அறிவித்தார். கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய் 21 பைசா என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இதற்கான கொள்முதல் பணி அடுத்த 6 மாதங்களில் நடைபெறும் என கூறினார். மேலும், நாளை முதல் ஆறு மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்