மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேதனை

மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், பணி மாற்றத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணி , நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது என்றும் இதனை தடுத்திட வேண்டும் என்றார். அரசு துறை அலுவலகங்களை கணினி மயமாக்கினாலும் லஞ்சம் குறையவில்லை என்றும் ஊழலில் தொடர்புடையவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார். மதுரை மாநகராட்சியில் லஞ்சம் அதிகளவில் உள்ளது என்றும் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதற்கு மதுரை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவை பலப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் 4 வாரத்தில், விஜிலென்ஸ் பூத்கள் திறந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்