ஓசூர்: 2 மாதங்களில் 80 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்பு

ஓசூரில் இரண்டே மாதங்களில் முறையான உரிம‌ம் இல்லாத 80 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓசூர்: 2 மாதங்களில் 80 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்பு
x
கிருஷ்ண‌கிரி மாவட்டத்தில் உரிம‌ம் இல்லாத‌ நாட்டுத்துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்குமாறு கிராம பகுதிகளில் தண்டோரா போட்டும் ஒலிபெருக்கி மூலமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பலரும், தங்களிடம் இருந்த உரிம‌ம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை ஆங்காங்கே வீசி வருகின்றனர். அந்த வகையில், தேன்கனிகோட்டை அடுத்துள்ள திப்ப சந்திரம் வனப்பகுதியில், 24 நாட்டுத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. ரோந்து பணியில் சென்ற போலீசார், அவற்றை கைப்பற்றி, தேன்கனிகோட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 மாதங்களில் மட்டும், 80 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரிடம் ஒப்படைக்காமல், நாட்டுத்துப்பாக்கிகள் ஆங்காங்கே வீசப்பட்டு வரும் நிலையில், அவை சமூக விரோதிகள் யாரிடமாவது கிடைக்கும் பட்சத்தில், விபரீதங்கள் நிகழ்ந்தேற வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கும் போலீசார், ரோந்து பணியை தொடர்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்