ஓமலூரில் பூட்டிக் கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம்...

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் பூட்டிக்கிடப்பதால், கோரிக்கை மனு அளிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓமலூரில் பூட்டிக் கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம்...
x
சேலம் மாவட்டம்,  ஓமலூர்  சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் பூட்டிக்கிடப்பதால், கோரிக்கை மனு அளிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள வெற்றிவேலில் சொந்த ஊர்  ஓமலூர் வட்டத்தில் உள்ள கருப்பூர் என்றாலும், அவர் தற்போது சேலம் நகரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஒரு நாள்  மட்டுமே எம்எல்ஏ அலுவலகம் வந்ததாகவும், அதன் பின்னர் பூட்டியே கிடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர், அதனால் கோரிக்கை மனு அளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், வாரம் இருமுறையாவது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும்,  தினமும் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்