முறைகேடு செய்து காலிப் பணியிடங்களை நிரப்பியதாக புகார் : 3 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

கல்வித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட ஆறு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேடு செய்து காலிப் பணியிடங்களை நிரப்பியதாக புகார் : 3 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
x
கடந்த 2011 ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய மூன்று நகரங்களில், கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்றது. இதில் 25 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 13 பாதுகாவலர்கள்  பணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர்  பரிந்துரையின் பேரில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. விசாரணையில் திருப்பரங்குன்றத்தின் முன்னாள் எம்எல்ஏ போஸ், திருமங்கலத்தின் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் உசிலம்பட்டியின் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் ஆகிய மூவர் மற்றும் 6 கல்வித்துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்