உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்..

காதலித்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.
x
காதலித்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு ஒரு இளம்பெண்  உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேட்டுபட்டியை சேர்ந்த திவ்யரோசிலின் என்ற அந்த பெண்ணை கல்லூரியில் உடன் படித்த அருண் ஜோஸ்பிரான்சிஸ் என்பவர் 4 ஆண்டுகளாக  காதலித்ததாகவும்,  தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் அந்த இளம்பெண் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக போலீசார் அப்பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்