பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளைப் வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. கண்டனம்
x
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 2 மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று பா.ஜ.க. அரசு,  உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மசோதா நிராகரித்தது தொடர்பாக 27 மாதங்களுக்கு பின்னர், உயர்நீதிமன்றத்தில், பா.ஜ.க.  அரசு கூறியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளி வந்திருக்கிறது என்றும், முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டப்பேரவையை அவமதித்து உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் பளிச்சென வெளிப்படுத்தும் வகையில், பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பேரவையில் கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்