ஓமலூர் : பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா... சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா, புதர்மண்டி பாழடைந்து கிடப்பது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஓமலூர் : பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா... சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா, புதர்மண்டி பாழடைந்து கிடப்பது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பூங்கா, கடந்த 16 ஆண்டுகளாக பயன்பாட்டு விடாமலும், பராமரிப்பு இன்றியும் பூட்டப்பட்டுள்ளது. சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இந்தப் பூங்காவின், விளையாட்டு உபகரணங்களை சமூக விரோதிகள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகளின் வரத்து படிப்படியாக குறைந்து, நின்று போனது. தற்போது, சிறுவர்கள் விளைாடும் பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதை மாற்றி பராமரிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்