திருச்செந்தூர் : மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழும் சிறுவர் பூங்கா

திருச்செந்தூர் சிறுவர் பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்செந்தூர் : மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழும் சிறுவர் பூங்கா
x
திருச்செந்தூர் சிறுவர் பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேருந்து நிலையம் அருகே பராமரிப்பு இன்றி உள்ள இந்த பூங்காவில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அருகில் குடியிருப்பு மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், விரைவில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்