நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் வழங்கி வந்த உதவித்தொகையை மத்திய அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி 2018- 19ஆம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்