மசாஜ் செய்வது போல் சென்று நகை திருட்டு : பெண்ணை கைது செய்தது போலீஸ்

சென்னை தேனாம்பேட்டையில், தொழிலதிபர் வீட்டில் மசாஜ் செய்வது போல் வந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை பெண் ஒருவர் திருடி சென்றார்.
மசாஜ் செய்வது போல் சென்று நகை திருட்டு : பெண்ணை கைது செய்தது போலீஸ்
x
தேனாம்பேட்டை வீனஸ் காலனி பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் தினேஷ் டால்மியா. இவரது மனைவி ராதாவுக்கு நரம்பு தொடர்பான பிரச்சினை இருப்பதால் மருத்துவரின் அறிவுறைப்படி கடந்த 15 ஆண்டுகளாக சவுமியா என்ற பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து மசாஜ் சிகிச்சை செய்துவருகிறார். இந்நிலையில் டால்மியா வீட்டில் இருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் பதித்த கம்மல், மோதிரம், ஆகிய நகைகளை, மசாஜ் செய்ய வந்த பெண் சவுமியா திருடி சென்றார். இது குறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் டால்மியா புகார் அளித்தார். இதனையடுத்து சவுமியாவை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்