விரிவடையும் 'பசியில்லா நெல்லை' திட்டம் : தனியார் அமைப்புக்கு குவியும் பாராட்டு...

தொண்டு உள்ளங்களால், நிரம்பும் பெட்டி...
x
நெல்லையில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் தனியார் அமைப்பு தொடங்கிய, பசியில்லா நெல்லை திட்டம், விரிவுபடுத்தப்பட்டுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 

உணவை வீணாக்காமல், பசியில்லா நெல்லை என்ற பசியாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது பலரது பாராட்டையும் பெற்றது. உணவுக்காக ஒருவர் கையேந்துவதை தவிர்க்கவும், தேவைக்கு அதிகமான உணவை வீணாக்குவதை தடுத்து, உணவு தேவை இருப்போருக்கு வழங்கும் விதமாக ஒன்றிணைக்கப்பட்டதே இந்த பசியில்லா நெல்லை திட்டம். 
ஓரிடத்தில் வைக்கப்படும் பெட்டியில், தானம் செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் உணவு, ரொட்டி ஆகியவற்றை வாங்கி பெட்டியில் வைக்கிறது. பசியின் கொடுமை அறிந்த இரக்க குணம் படைத்தவர்கள், உணவுகளை சொந்த செலவில் வாங்கி வைக்கின்றனர். இந்த உள்ளங்களால், அட்சய பாத்திரமாக மாறிப்போன 'பசியில்லா பெட்டியில்' உள்ள உணவுகளை தேடி, பசியால் வாடுவோர், யாருடை அனுமதியும் இன்றி வயிறாற உண்கின்றனர். இந்த 'பசியில்லா நெல்லை' திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்