இடஒதுக்கீடு விவகாரம் : "அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொருளாதார ரீதியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நீட் விலக்கு, மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல், பொருளாதார ரீதியில் 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன நிகழ்வாக பேச அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததும், பொருளாதார ரீதியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபு பக்கர் ஆகியோரும், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி, அனைவருடைய கருத்துக்களும்  கேட்கப்படும் என்றார். அதேபோல் சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்