மிக்-21 போர் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்

விவசாய நிலத்தில் விழுந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
x
கோவை அடுத்த இருகூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 போர் விமானத்தில் இருந்து ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழன்று விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. கிழே விழுந்தவுடன் பெட்ரோல் டெங்க் வெடித்ததால்,  சுமார் 3 அடி ஆழத்திற்கு விவசாய நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது.  அங்கு சிதறி கிடந்த விமானத்தின் பாகங்களை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.  பெட்ரோல் டேங்க் விவசாய நிலத்தில் விழுந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்