ஜம்புகண்டி பகுதியில் மதுக்கடை வேண்டும் என மனு கொடுத்த பழங்குடியின மக்கள்

24-ம் தேதி மதுபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா சம்பவ இடத்தில் பலியானாளர்.
ஜம்புகண்டி பகுதியில் மதுக்கடை வேண்டும் என மனு கொடுத்த பழங்குடியின மக்கள்
x
கோவை ஜம்புகண்டி பகுதியில் கடந்த 24-ம் தேதி மதுபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் சமூக செயல்பாட்டாளரும் மருத்துவருமான ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா சம்பவ இடத்தில் பலியானாளர். இதனையடுத்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும் வடக்கு வட்டாட்சியர் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  இந்த நிலையில்,  ஜம்புகண்டி பகுதியில் இயங்கி வந்த மதுபான கடையை மீண்டும் திறக்க கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.ஆனால் மனு கொடுக்க வந்தவர்கள் மதுக்கடை வேண்டாம் என அப்போது கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுக்கடை அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர்  பணம் கொடுத்து அழைத்து வந்து பழங்குடியின மக்களை மனு கொடுக்க வைத்துள்ளது  விசாரணையில் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்