துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை, தமிழக மக்கள் குறித்து கிரண்பேடி விமர்சனம் செய்துள்ளது, அவர் வகிக்கும் பதவிக்கு துளியும் பொருந்தாத ஒன்று என்று குற்றஞ்சாட்டியுள்ளார். எத்தனையோ போரில் தமிழக வீரர்கள் உயிர் நீத்துள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், நாட்டில் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் ஓடோடி உதவுவது தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். புதுவை துணை ஆளுநர் கூறியிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி- ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாகவே தெரிகிறதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து விட்டார்களே என்ற ஒரே எரிச்சலில் கிரண் பேடி பேசியுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுவை துணை நிலை ஆளுநராகத்  தொடரும் கிரண்பேடி, தமிழக அரசைப் பற்றிப் பேசவோ, தமிழக மக்களைப் பற்றிக்  கருத்துக் கூறவோ எவ்வித தார்மீகத் தகுதியும், உரிமையும் இல்லாதவர்  என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரண்பேடி தமது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்