குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

ஜூன் மாதம் அறிவிக்க வேண்டிய குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் திறக்கப்படும் தண்ணீர் திறக்கப்படவில்லை.  இதனால், காவிரி டெல்டா நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. ஓரிரு இடங்களில், மானாவாரி விவசாயமும், ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடியும் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்காக குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்படும். அதன் மூலம், விதை நெல், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும். ஆனால், தற்போது, அந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்த கும்பகோணம் பகுதி விவசாயிகள், உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தை, அரசு அறி​விக்க வலியுறுத்தியுள்ளனர். கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு, குளம் மற்றும் நீர்வழித் தடங்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும், மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவதை நிறைவேற்றவும் அவர்கள் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்