தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. ஆக திரிபாதி பொறுப்பேற்பு
தமிழகத்தின் 29வது டி.ஜி.பி. ஆக ஜே.கே. திரிபாதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
டி.ஜி.பி. ஆக இருந்த டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவருக்கு மேலும், பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அந்தப் பதவிக் காலமும் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி. ஆக இரண்டு நாட்களுக்கு முன் ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திரிபாதி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
Next Story