நம்பிக்கை இல்லா தீர்மானம் : "புலி பதுங்குவது பாயத்தான்... ஓடி ஒளிவதற்கு அல்ல..." - ஸ்டாலின்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் திமுக பதுங்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
x
மறைந்த  திமுக எம்.எல்.ஏ. ராதாமணியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது சொந்த கிராமமான விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சி எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கெளதம சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராதாமணியின் உருவப்படத்தை ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு வாக்களித்து திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்ததாக கூறினார். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் திமுக பதுங்கவில்லை என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்