அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அண்மையில் திமுகவில் இணைந்த சிலர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
அண்மையில் திமுகவில் இணைந்த சிலர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருபக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற, மற்றொரு மக்கள் அமமுகவில் இருந்து விலகிய, தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியல் களம், அடுத்தடுத்து பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பதை பற்றிய அறிவுரையை விட, கட்சிக்கு கட்டுப்பட்டு எப்படி செயல்பட வேண்டும் என்ற அறிவுரையே அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அண்மையில் திமுகவில் இணைந்த சிலர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முடிவையும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற முடிவையும் மக்கள் எடுத்தாக கூறிய முதலமைச்சர், அதிமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் பேச்சு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் வராமலேயே ஆட்சி மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்