குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து : 5 பேர் காயம், மூவருக்கு தீவிர சிகிச்சை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து : 5 பேர் காயம், மூவருக்கு தீவிர சிகிச்சை
x
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான இந்த ஆலையில், ராணுவத்திற்கு தேவையான குண்டுகளுக்கு பயன்படும் உதிரி பாகங்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலை, தொழிற்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் அதிக அழுத்தம் காரணமாக வெடிவிபத்து ஏற்படடது. அதில், சூரஜ்குமார், ராபின், நாகராஜ் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் மூன்று பேர் தீவிர சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்