"தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை போரூரில் நடைபெற்றது.
x
கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை  போரூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சி எம்.பி. டி.ஆர். பாலு, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  விழாவில் ஏழை எளிய மக்களுக்கு  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசியலில் வெற்றிடம் என்று  கூறி வந்த சில நடிகர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என கூறினார். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்தும் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்