"ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது" - வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில். சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில். சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியிலும், மக்கள் போராட்டத்தின் பின்னணியிலும் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வாதிட்டார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறைப்படி அனுமதி பெற்று ஆலை இயக்கப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு சம்பவம், அதை தொடர்ந்த விசாரணைகளில் ஆலையை சேர்க்கவில்லை எனக் குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர், தங்கள் ஆலை தண்டிக்கப்பட்டதாக வாதிட்ட நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்