ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி

ஏசி, அதிவேக இணைதள சேவை என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி.
x
திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பில் மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திறந்து வைத்தார். குறிப்பாக 1 முதல் 5ம் வகுப்பு வரை இருந்த இந்த பள்ளியை சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிப்பித்து,  தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஏசி வகுப்புகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், அதிவேக இணையதள சேவை கொண்ட கணினிகள், ஐ பேட் உதவியுடன் பாடங்களை கற்பிக்கும் வசதி, உலக நடப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சி, தரமான சமையல் அறை, மாணவர்கள் மதிய உணவு அருந்த தனி அறை, விளையாட்டு மைதானம், பறவைகள் மற்றும் தோட்டங்களை பராமரிப்பது பற்றி கற்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு 3 செட் சீருடை, புத்தக பைகள் அளிக்கபட்டுள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 30 மாணவ, மாணவிகள் படித்த நிலையில் தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 53 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக புதியதாக துவக்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பில் 18 பேர் சேர்ந்துள்ளனர். இது போன்ற மாதிரிப் பள்ளிகளை மாவட்டம் முழுவதும் சுமார் 18 மையங்களில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ஆட்சியர் கந்தசாமி கூறுகிறார். மாற்றத்திற்கான சிறந்த கருவி கல்வி. அந்த கல்வியை மாணவ,மாணவிகளுக்கு அளிக்கவும்,குறிப்பாக தனியார் பள்ளி மோகத்தில் இருந்து பெற்றோர் விடுபட்டு,  தங்களது பிள்ளைகளை  தரமான அரசு பள்ளிகளில் சேர்க்கும்  வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்விதுறை மேற்கொண்டுள்ள இந்தகைய முயற்சி பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்