ராமேஸ்வரம் : கோயில் வைப்புநிதி ரூ. 78 லட்சம் கையாடல் - தற்காலிக கணினி ஊழியர் தலைமறைவு

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வைப்பு நிதியில், 78 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமேஸ்வரம் : கோயில் வைப்புநிதி ரூ. 78 லட்சம் கையாடல் - தற்காலிக கணினி ஊழியர் தலைமறைவு
x
ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வைப்பு நிதியில், 78 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கோயில் இணை ஆணையர் கல்யாணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அதில், தற்காலிக கணினி ஊழியரான சிவன் அருண்குமரன் என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஊழியர்களின் வைப்பு நிதியை, ஆன்-லைன் மூலமாக தமது தந்தையின் கணக்கிற்கு மாற்றியதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராமநாதசுவாமி கோவிலில் விசாரணை நடத்தினர். கையாடல் புகாரில் சிக்கியுள்ள தற்காலிக ஊழியர் சிவன் அருண்குமரன் தலைமறைவாகி உள்ள நிலையில், வைப்பு நிதியை போலீசார் மீட்டுத்தர வேண்டும் என, கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்