பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை

பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
x
பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான கடைகளில், வாடகைக்கு குடியிருக்கும் கடை வாடகைதாரர்கள் சுரேஷ் பாபு, லட்சுமணன் உள்ளிட்ட 61 கடை உரிமையாளர்கள் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது கடைகளை, ஏலம் விடுவதற்கு தடை கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பழனி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்