"பேனர் - அரசு நடவடிக்கையில் திருப்தி இல்லை" - உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை, திருப்திகரமாக இல்லை என, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
x
'சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும்' என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு நடவடிக்கையை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள்  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு, 'அரசின் நடவடிக்கை திருப்தியில்லை' என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது நீதிமன்றத்தின் வேலையல்ல என்றும் தெரிவித்தனர். 

மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள் வைக்கும் பேனர்களை, எங்கும் பார்க்க முடிகிறது என, நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

அப்போது, பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்