குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து முயற்சி...

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை நாகர்கோவில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து முயற்சி...
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் சில பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறையும், சில பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒரு முறையும் சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து  திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்,  அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாநகராட்சி ஆணையாளர் உடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், குடி நீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.  தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை நாகர்கோவில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்