கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...

சென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.
கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...
x
சென்னையில் கஞ்சா வைத்திருந்த இருவரை துரத்தி சென்று  காவலர் மடக்கிபிடித்தார்.  சென்னை பறக்கும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த இருவர் பூங்கா ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் பிரதீப் என்ற காவலர் விசாரித்து கொண்டிருந்த போது அவரை தள்ளிவிட்டு கூவத்தில் குதித்து தப்பியோடியுள்ளனர். எனவே அவர்களை விடாமல் துரத்தி சென்று காவலர் மடக்கிபிடித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்