மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது
x
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர்  மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதீனமான சுவாமிநாத தம்பிரான் கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில்  திருவிடைமருதூர் காவல்நிலையத்தல் அவர் அளித்துள்ள புகாரில், மதுபாலன், ஹரிஹரன் ஆகிய இருவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் இருவரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்