துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
x
துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து  துபாய் நோக்கி சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது ஷபீர் என்பவரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, ஒரு சூட்கேசில் இருந்த துணிக்குள் கட்டுக் கட்டாக யூரோ கரன்சிகள், குவைத் தினார், துபாய் திர்ஹம்ஸ் ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது ஷபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்