மத்திய சிறையில் காலியாக உள்ள இடங்கள்... ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டார். கோவை மத்திய சிறையிலும், சிங்காநல்லூர் திறந்த வெளி சிறைச்சாலையிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன் ஜூலை 6ஆம் தேதிக்குள், கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story