மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற இளைஞர்...

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
x
சென்னையை அடுத்த  நீலாங்கரையில், நேற்றிரவு மதுபோதையில், நவீன் என்பவர் தமது நண்பருடன் காரில் வந்தார். அவர்கள் வந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் மோதியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார், மதுபோதையில் இருந்தவரிடம், விசாரணை நடத்த முயன்ற போது, காரின் உரிமையாளர் நவீன், போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்றார். இது தொடர்பாக நீலாங்கரை போக்குவரத்து புலனாய்வு போலீசார்,  நவீன் மீது, 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் அவரைத் தாக்கிய காட்சிகள், தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்