திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கத்தில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு
x
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கத்தில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சமூகவிரோதிகள்  சிலர் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார்களையும் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் திருடி சென்றனர். இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன்,  சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்