உச்சத்தை தொட்ட தங்கக் கடத்தல் : குருவிகளை சிக்க வைத்து தப்பிக்கும் கொக்குகள்

திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது
x
திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 27 கிலோ கடத்தல் தங்கம் பிடிப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், அதிகபட்சமாக இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் பிடிபட்டது.

மலேசியா நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்தான், தங்க கடத்தல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் குருவி என்றும், அவர்களது முதலாளிகள் கொக்கு என்றும் சங்கேத பாஷையில் அழைக்கப்படுகின்றனர். வெளியூர் சுற்றிப் பார்க்கும் ஆசையில் செல்லும் சில அப்பாவிகள், குருவிகளாகி சிறைக் கூண்டில் அடைபடும் பரிதாப சம்பவங்களும் நடக்கின்றன. 

சீனா தனது நாட்டின் ஹாங்காங் நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக மாற்றியுள்ளது. இங்கிருந்து தங்கம் கடத்தப்படுவதை கண்டுக் கொள்ளாமல், தனது தங்க விற்பனை உயர்வதற்காக ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை. 

வரிஏய்ப்பின் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை இந்தியா இழக்கிறது. இது சீனா, இந்தியா மீது தொடுத்திருக்கும் மறைமுக பொருளாதார போர் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

Next Story

மேலும் செய்திகள்