அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.
அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.  வருவது, விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகள் பழமையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்துள்ள உடுமலை, தாராபுரம், பழனி, பொள்ளாச்சி, கணியூர் கோட்டம் என, ஆயிரத்து 200 ஏக்கர் கரும்புகள், ஆலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அலங்கியம், செலாம்பாளையம், சிக்கினாபுரம், சந்திராபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 100 ஏக்கர் கரும்பு ஒப்பந்தத்தில் உள்ளது. தற்போது, அறுவடை பருவம் தாண்டிய நிலையில், ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் கரும்புகள் வெட்டப்படவில்லை. இதனால், கரும்பு பயிர்கள் வயலில் காய்ந்து வருகின்றன. ஏற்கனவே விளைச்சல் குறைந்துள்ளதாக கூறும் விவசாயிகள், கரும்பு காய்ந்து வருவதால் எடை குறைந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்