தி.மு.க. எங்கு இருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் - தயாநிதி மாறன்

தி.மு.க. எங்கிருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் என மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எங்கு இருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் - தயாநிதி மாறன்
x
சென்னை அரும்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன், வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழர்களின் வாழ்க்கை  வகுப்புவாதிகளின் கையில் சிக்கி இருக்கிறது என்றார். இந்தியா என்ற நாட்டில் இன்னொரு நாடு  இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான் என்றும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், தி.மு.க. எங்கிருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் என்றார். மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய பிறகு அ.தி.மு.க.வினர் யாகம் நடத்தியதாக தயாநிதிமாறன் விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்