திருவெறும்பூர் அருகே தனியார் பள்ளிக்கு சீல், 3 வருடமாக அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்

திருச்சி அருகே 3 வருடமாக அனுமதியின்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே தனியார் பள்ளிக்கு சீல், 3 வருடமாக அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்
x
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் உள்ள அனமதியின்றி தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வரையில் உள்ள அந்த தனியார் பள்ளியில் 220 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி முறையான அங்கீகாரம் பெறாமல் 3 ஆண்டுகள் இயங்கி வருவதால் அதனை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் நேற்று பள்ளிக்கு சீல் வைக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளி தாளாளர் சாருலதா தடுத்து நிறுத்தியதோடு, மேலும் அங்கீகாரம் பெறுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு சீல் வைக்க  சென்ற அதிகாரிகள் சீல் வைக்காமலே திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் அப்பள்ளிக்கு சீல் வைக்க அரசு. அதிகாரிகள் சென்றனர் பள்ளி தாளாளர் சாருலதா மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து போலீஸ் உதவியுடன் அப்பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பள்ளிக்கு சீல்வைக்கப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு உருவானது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அதேபகுதியில், குளத்தை ஆக்கிரமித்து மற்றொருதனியார் பள்ளி கட்டடம் எழுப்பி செயல்பட்டு வருவதாகவும் அதற்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்