ஈரோடு : மகனை மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் விவசாயி - பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி

பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, விவசாயி ஒருவர் தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல, மாட்டு வண்டியை பயன்படுத்தி வருவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு : மகனை மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் விவசாயி - பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி
x
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர், தனது மூன்றரை வயது மகனை தினந்தோறும் மாட்டு வண்டியில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். ஏன் மாட்டு வண்டி பயணம் என கேட்டால், பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி என்கிறார், அருண்குமார். மாட்டு வண்டி பயணத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதே தனது முக்கிய குறிக்கோள் என்று தெரிவிக்கும் அவர், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார். மாட்டு வண்டியில் தான் அனைத்து இடங்களுக்கும் செல்வதாக சொல்லும் இவர், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்