வீராணம் நீர் மட்டம் கிடுகிடுவென குறைவு... சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருவதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வீராணம் நீர் மட்டம் கிடுகிடுவென குறைவு... சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக  விளங்கி வருகிறது. அதோடு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. 47 புள்ளி 50 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், 39 அடியாக இருக்கும் வரை மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியும்.  தற்போது சென்னைக்கு குடி நீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர்  அனுப்பப்பட்டு வருவதால், ஏரியின் நீர்மட்டம் 42 புள்ளி 98 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதாலும் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதன்காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதில் இன்னும் சில நாட்களில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்