கோத்தகிரியில் அரிய பாறை ஓவியங்கள் - தொல்லியல் துறையினர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பாறை ஓவியங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோத்தகிரியில் அரிய பாறை ஓவியங்கள் - தொல்லியல் துறையினர் ஆய்வு
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பாறை ஓவியங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கரிக்கையூர் என்ற ஆதிவாசி கிராம வனபகுதிக்குள் உள்ள பாறையில் அரிய வகை ஓவியம் வரையபட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாறையில் 4 அயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையபட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை அங்கு வாழ்ந்த இருளர் இன ஆதிவாசி மக்கள் வரைந்துள்ளதாக கூறப்படுகிறது. பசுமாடு, குதிரை, பாம்பு, ஆண்கள் நடனமாடுவது, வீரர்கள் போருக்கு செல்வது, அம்பு எய்தல், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் தத்ரூபமாக வரையபட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரிகள், இது இந்தியாவிலேயே நீள்மான பாறை ஓவியம் என்றும் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்