பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்
பதிவு : ஜூன் 17, 2019, 01:54 PM
பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முதலில் வெளியிட்ட அட்டவணைப்படி, தர வரிசைப் பட்டியல் இன்று 17ம் தேதி வெளியிடப்படும் எனவும், 20 ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி களில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதலில் வெளியான அட்டவணை ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 25-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வும், 27ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
26ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வு, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்லைன்  வழியாக நடைபெறும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோல, இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல், வரும் 20 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.

46 views

குறைந்தது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை

கடந்தாண்டை போல் நடப்பாண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

582 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

113 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

14 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

74 views

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

13 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

17 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.